எதற்காக மாநாடு?

தகவல் நுட்பவியல் நாம் இதுவரையில் எண்ணிப்பார்த்திராத விதங்களிலில் நமது வாழ்வை மாற்றியமைத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு கல்வித்துறையும் ஒரு விதிவிலக்கல்ல. இன்று நடப்பிலுள்ள கல்வித்திட்டமானது 19-ஆம் நூற்றாண்டுவாக்கில் தொழிற்புரட்சிக்குத் தேவையான ஊழியர்களையும் திறனாளிகளையும் தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும். ஆனால், இந்த ஏற்பாடுகளை தகவல் நுட்பிவியல் கேள்விக்கு உட்படுத்தத் தொடங்கிவிட்டது.

இதனை உணர்ந்துள்ள மேலை நாட்டுக் கல்வித் திட்டங்கள் தத்தம் சூழலுக்கும் வசதிக்கும் ஏற்றாற்பொல் உகந்த மாற்றங்களைச் செய்து வருகின்றன. மலேசியக் கல்வியமைச்சும் இந்த நுட்பவியல் வளர்ச்சியால் ஏற்பட்டு வரும் மாற்றங்களை உள்வாங்கி, அது 2013-ஆம் ஆண்டு வெளியிட்ட கல்விப் பெருந்திட்டத்தில் வரைந்துத் தந்தது. இத்திட்டங்களைக் கல்வியமைச்சு நடைமுறைப்படுத்த முயன்றுவரும் அதே வேளையில், நம் சமூகமும் விழிப்புடன் இருந்து செயல்பட்டால் நம் பள்ளிகள் நடந்து வரும் மாற்றங்களிலிருந்து விடுபட்டுப் போகாமல் இருப்பதை உறுதிசெய்யலாம்.

நம் பள்ளிகளி ஏற்பட்டு வரும் மாற்றங்களை நன்முறையில் பயன்படுத்தி நம் பிள்ளைகளின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாடு நடைப்பெறவிருகின்றது.