அமர்வு 4 : மாணவர்களின் திறன் வளர்ச்சி 2 (புறப்பாடம்)

அமர்வு 4 : மாணவர்களின் திறன் வளர்ச்சி 2 (புறப்பாடம்)

உலக அரங்கில், இந்த நூற்றாண்டில் விளையாட்டுத்துறையின் வளர்ச்சி

அபரீதமானது. விளையாடடை பொழுது போக்கு அம்சமாகவும் ஆரோக்கிய வாழ்வின்

காரணமாகவும் பார்க்கும்காலம் போய், அதனை மேல்நிலை கல்வியாகவும்,

ஆராய்ச்சிக்கும் அறிவியலுக்கும் உள்ளடங்கிய புலமாகவும், பொருளாதார

சாதனமாகவும், பிரபலமாவதற்கு ஒரு மேடையாகவும் அமைந்து வருவதை

ஆதாரப்பூர்வமாகக் காண்கிறோம் . மாணவர்களிடையே கட்டொழுங்கை

நிலைப்படுத்தும் சக்தி வாய்த்த சாதனமாக விளையாட்டுத்துறையும் மற்ற புறப்பட

போதனைகளும் இருப்பதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

பல பள்ளிகளில் குறிப்பாக நமது தமிழ்ப்பள்ளிகளில், விளையாட்டுத்துறைக்கு

முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் குறைந்து வருகின்றது. இதற்கு பல காரணங்கள்

இருந்தாலும், மாணவர்களின் அனைத்துப்புல பரிணாம வளர்சசியில் திறன்

அடிப்படையில் அமைந்த விளையாட்டுக்கல்வியும் , புறப்பட போதனைகளும் அதில்

உள்ளடங்கிய மேல்நிலை திறன்களும் அவர்களின் ஒட்டுமொத்த வளர்சசியில்

மிகப்பெரிய பங்காற்றுகின்றன.

தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும்

விளையாட்டுத்துறை வழிவகுக்கும் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. உடல்,

உளவியல் ரீதியாகவும் மற்றும் சமூகவியல் ரீதியாகவும் மாணவர்களை

உருமாற்றம் செய்யவல்லக் கருவியாக விளையாட்டுத்துறையும் மற்ற புறப்பட

போதனைகளும் வலு கொண்டுள்ளன.

மலேசிய இந்தியர்களிடையே விளையாடுதுறையின் மேல் இருந்த நம்பிக்கை 1980

முத்த 2010 வரை குறைந்து வந்துள்ளதை மலேசிய அரங்கில் நடந்த அனைத்து நிலை

விளையாட்டுக்களிலும் இந்திய இளைஞர்களின் மிகக்குறைந்த பங்கேற்பு

சான்றுகோலாக அமைகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் உலக

விளையாட்டு அரங்கில் நிகழும் மேம்பாடான நிலைகளை காணும் பெற்றோர்களின்

மனதில் புதிய நம்பிக்கையை விளைத்துள்ளது எனலாம். இதன் அடிப்படையில் தமிழ்

பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும் அதே வேளையில்,

பள்ளி நிலையில் மேம்பாட்டுத்திட்டங்களை வியூக அனுகு முறையில்

வரையறுத்தாலும், நெடுந்திட்ட வரைதலும் அவசியமானதாக இருக்கின்றது.

திட்டங்கள் நிறைவேற சார்புள்ள அனைத்து அமைப்புக்களின் ஒன்றிணைந்த

ஒத்துழைப்பும் இங்கே அவசியமாகிறது.